புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று பாதிப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதுவகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளையும் பரிசோதித்து நோய் கண்டறிந்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இதுவரை இந்தியாவில் பி.1.1.529 வகை கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதுவகை கொரோனா குறித்து பிரிட்டன் அரசின் சுகாதாரப் பாதுகாப்பு ஏஜென்சி கூறுகையில், புதிய வகை உருமாற்ற கொரோனா வைரசில் ஸ்பைக் புரோட்டீன் இருக்கிறது. இது தற்போதுள்ள கொரோனா வைரசில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இது ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைத்துவிடும்,' எனக் கூறியுள்ளது. இதனையடுத்து ஆறு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் அரசு தடை செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதுவகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அங்குள்ள விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய உலக சுகாதார அமைப்பு இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளையும் பரிசோதித்து நோய் கண்டறிந்து தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!