dinamalar telegram
Advertisement

மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை: விரைவுபடுத்த பாக்.,கிடம் இந்தியா வலியுறுத்தல்

Share
புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று, இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர். இரு நாட்கள் நடந்த மோதலில் உயர் அதிகாரிகள் வீரமரணம் அடைந்தனர். 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 166 பேர் பலியாகினர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கு, வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அப்போது, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் நடக்கும் வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், தனது கட்டுப்பாட்டில் உள்ள மண்ணை, இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம் என ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் தனித்தனியாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர் எனவும்; இந்த தாக்குதல் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மஹாராஷ்டிர மாநில போலீஸ் நினைவிடத்தில் மாநில அரசு சார்பில் இரங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • உளறுவாயன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்

  எங்கே .. . அந்த மூர்க்கன் மைந்த்தனை காஅணும் .. .. .

 • sankaseshan - mumbai,இந்தியா

  மகாராஷ்டிரா கூட்டணி நினைவு நாளை அனுசரித்தார்களா குற்றாவாளிகள் காங்கிரசுடன் அரசு நடக்கிறதே

 • Mohan - Salem,இந்தியா

  நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம்,நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தேவோம், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவோம் என்பன போன்ற எந்த உறுதி மொழிகளும் தராமல்...இந்தியாவை ஒழிப்போம், அப்பாவி இந்தியர்களை கொல்வோம், காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைப்போம், பயங்கரவாதம் செய்வோம்... என்று கூறி முஸ்லீம் மக்களை மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து கொலை மால்கம் மட்டுமே குறிக்கோள் என இருக்கும் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களும் அவர்களை ஆட்டுவிக்கும் இராணுவ தளபதிகள், மூளை கலங்கிய முட்டாள்களாக இருக்கும் வரை... ஐயோ பாவம் .. பாக்கிஸ்தான் பொது ஜனங்கள். குரங்காட்டியின் கயிற்றில் கட்டிய குரங்குகள் போல ஆடிக்கொண்டு சுயமிழந்து நிற்கும் அறிவிலிகள்..மாறுவது எந்நாளோ?

 • raja - Cotonou,பெனின்

  "மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் நடக்கும் வழக்கை விரைவுபடுத்த வேண்டும் " .... இனி அடுத்த வருடம் இதே நாளில் மீண்டும் இந்த வரிகள் பத்திரிகையில் வரும்....

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்தியாவில் ஊழல் வாதிகளுக்கு ஜாமீன் கொடுத்து வெளியில் ராஜவாழ்க்கை வாழ வைத்து இருப்பது போல அங்கிட்டு தீவரவாதிகளுக்கு ஜாமீன் கொடுத்து வெளியில் ராஜவாழ்க்கை வாழ வைத்து கொண்டு இருக்கிறார்கள் ரெண்டுமே நாட்டிற்கும் அந்த நாட்டின் மக்களுக்கும் மிகவும் ஆபத்தை உண்டாக்க கூடியவை ...

Advertisement