dinamalar telegram
Advertisement

கர்நாடகாவில் ஒரே மருத்துவக்கல்லூரியில் 182 பேருக்கு கோவிட்

Share
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில், 182 மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தர்வாத் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.டி.எம் மருத்துவக் கல்லூரியில் கடந்த நவம்பர் 17ம் தேதி புதிதாக கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் என சுமார் 3,000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இக்கல்லூரியின் மாணவர்கள், பேராசிரியர்கள் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இதனையடுத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, முதலில் 300 பேரை பரிசோதனையிட்டதில் 66 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை முடிவுகள் வெளிவந்திருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டவர்கள் எனவும், அவர்களில் பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • ஆரூர் ரங் -

    இரண்டு தடுப்பூசிகளும் போட்டிருந்தால் கூட தொடர்ந்து நோயாளிகளுடன் போராடுவதால் மருத்துவர்களும் வைரஸ் தொற்று ஆபத்து எப்போதுமே அதிகம்தான் .🙄 இருந்தாலும் இறப்பு ஆபத்து மிகக் குறைவு

  • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

    இவர்களெல்லாம் நீட் தேர்வெழுதி தகுதி பெற்ற மருத்துவர்கள்...டாஸ்மாக் டுமிழன்மாதிரி நீட் தேர்வுக்கு பயந்தவனுக கிடையாது..பாருங்க தமிழ்நாட்டில் இந்தமாதிரி மருத்துவக்கல்லூரியில் நடக்கும்? தகுதி இல்லா பயலுங்க துமிலன்ஸ் ..இதுக்குதான் நீட் அவசியம்ன்னு தலையால அடிச்சுகிறோம்.

  • அப்புசாமி -

    தடுப்பூசின்னு என்னத்தப் போட்டாங்களோ? 100 கோடி, 110 கோடி தடுப்பூசின்னு மெடல் குத்திக்கிறாங்கோ..

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அதில் ஒரு பகுதி மாணவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து இங்கே படிக்க வந்தவர்கள் என்பதனையும் இங்கே எழுத விழைகிறேன் . அவர்கள் வந்த மாநிலத்தில் சாத்தான்க அதிகம் என்றாலும் மாற்றி எழுதியே பழக்கப்பட்டவர்கள்

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    தடுப்பூசி போட்டவர்களை பொது இடங்களில் அனுமதிப்பது போடாதவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். தடுப்பூசியால் கொரானா பரவாது என்பது ஒரு சில படித்தவர்கள் தெரிந்தே செய்யும் பித்தலாட்டம் மற்றும் மற்ற படித்தவர்களின் விஞ்சானத்தின் மீதான மூட நம்பிக்கைகள்தான் காரணம் . தடுப்பூசி போட்டவர்களுக்கு தோற்று ஏற்பட்டால், பாதிப்பு அல்ல து இறப்பு குறையுமா என்பதும் கேள்விக்குறியே?. அனைவரும் பயத்துடன் விழிப்புடன் இருப்பது இதன் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது அல்லது குறைத்துள்ளது என்று மட்டுமே இப்போதைக்கு கூற முடியும் .

Advertisement