dinamalar telegram
Advertisement

விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் ஆழியாளம் அணைக்கட்டிலிருந்து, பாலக்கோடு வட்டம் தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்த திட்டத்தால் சூளகிரி வட்டத்தில் உள்ள எந்த ஒரு ஏரிக்கும் பயனில்லை. எனவே இந்த திட்டத்தை, மாற்று பாதையான சானமாவு காப்பு காடு வழியாக பீர்ஜேப்பள்ளி ஏரிக்கு கொண்டு வந்தால், ஏற்கனவே உள்ள கால்வாயின் மூலமாக இங்குள்ள அனைத்து ஏரிகளும் பயனடைந்து தூள்செட்டி ஏரிக்கும் தண்ணீர் கொண்டு செல்லலாம். விவசாய நிலங்களையும் கையகப்படுத்த தேவையில்லை. எனவே இந்த திட்டத்தை கைவிட்டு, மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி முத்தாம்பட்டி, கோணம்பட்டி, மெட்றை, அளேசீபம், மாமரத்துப்பட்டி, கொடகாரப்பள்ளி, தேவசானப்பள்ளி, கனுஜுர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement