dinamalar telegram
Advertisement

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: தி.மு.க., பொறுப்பாளர் அறிக்கை

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் 28 மதியம், 12:00 மணிக்கு பர்கூர் ஒன்றியம், பேரூர் இளைஞரணி சார்பில் காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோர், 120 பேருக்கு சீருடை, மதிய உணவு, பர்கூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில், 230 பேருக்கு நலத்திட்ட உதவி, மதிய உணவு வழங்கப்படுகிறது. இதுபோல கிழக்கு மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள நலத்திட்ட பணிகளுக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரஜினிசெல்வம் அறிவுரைப்படி, நிகழ்ச்சிகளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement