dinamalar telegram
Advertisement

பாலில் கலப்படம்; முகவர்கள் புகார்

Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆவினிலிருந்து, ஓசூர் பகுதிக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் பால் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த, 23ல், ஆவின் டைரியிலிருந்து சப்ளை செய்யப்பட்ட அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட, 6,000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் முழுமையாக கெட்டுப்போய் இருந்ததாகவும், இதனால் இரண்டு லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்ததாக முகவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கடிதம் அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவின் பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement