dinamalar telegram
Advertisement

கேரள அரசு பஸ்-லாரி மோதி 5 பேர் படுகாயம்

Share
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, லாரியின் பின்னால் கேரள அரசு பஸ் மோதி ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, கேரள அரசு பஸ் பெங்களூரு நோக்கி நேற்று காலை, 6:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் திம்மாபுரம் மேம்பாலம் மீது சென்ற பஸ், கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் பஸ் டிரைவர் ஹரிஷ், 39, படுகாயமடைந்தார். மேலும் ஜெஸ்மால், பைரஸ், அகில் ஜாக், நவீன் என, நான்கு பயணிகள் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பஸ் டயர்கள், கதவுகள் 'லாக்' ஆகியதால் பயணிகள் கண்ணாடி மற்றும் அவசர கதவுகளின் வழியாக வெளியேற்றப்பட்டனர். மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதால், மூன்று மணி நேரம் போக்குவரத்து சரி செய்யப்படாமல், மேம்பாலத்தின் கீழே போக்குவரத்து மாற்றப்பட்டது. காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement