dinamalar telegram
Advertisement

மழையால் வீடு இடிந்து சேதம்: குளியலறையில் குழந்தைகளுடன் தாய்

Share
ஊத்தங்கரை: தொடர் மழையால் வீடு இடிந்ததால், குளியலறையில் மூன்று குழந்தைகளுடன் தாய் வசித்து வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியை சேர்ந்தவர் ராதா, 27. இவர் தன் மூன்று குழந்தைகளுடன், ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் பழனி, மூன்று மாதங்களுக்கு முன்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது பெய்த கனமழையால் வீட்டின் சுவர் கடந்த, 20ல், இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். வீட்டில் மற்ற அறைகள் இல்லாததால், குளியல் அறையை இருப்பிடமாக மாற்றி வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில், உடைமைகளை வெளியில் வைத்துவிட்டு, மூன்று குழந்தைகளுடன், குளியல் அறையில் ராதா தங்கி உள்ளார். அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என, வேதனையுடன் கூறினார். அவர்கள் வசிப்பதற்கு வீடு இல்லாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும், மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு, மிகவும் சிரமப்பட்டு வருவதால், அரசு உதவ வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement