dinamalar telegram
Advertisement

பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் குண்டாசில் கைது

Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த சென்னியம்பட்டி கொட்டாயை சேர்ந்தவர் ரவி மனைவி தேன்மொழி, 34. இவர், பாளையம்புதூரில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்தார். இதே மில்லில் பணியாற்றி வந்த பாகலஹள்ளி செட்டி தெருவை சேர்ந்த அசோக், 30, என்பவருக்கும், தேன்மொழிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடன் பிரச்னையில் சிக்கிய அசோக் அதிலிருந்து மீள திட்டமிட்டு, நகைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறி தேன்மொழியை அழைத்துள்ளார். இதை நம்பி கடந்த செப்., 24ல், தேன்மொழி நகைகளுடன், அசோக்குடன் சென்றுள்ளார். முத்தம்பட்டி வனப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, தேன்மொழியை அழைத்து சென்ற அசோக், அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். பின்னர் அவரை கொலை செய்து, 6 பவுன் நகைகளை அசோக் திருடி சென்றார். அதியமான்கோட்டை போலீசார் கடந்த, அக்., 15ல் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., கலைச்செல்வன், கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அதியமான்கோட்டை போலீசார், அசோக்கிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement