dinamalar telegram
Advertisement

கூட்டுறவு சங்கத்தில் ரூ.45 லட்சம் மோசடி: மாஜி தலைவர் உட்பட நான்கு பேர் கைது

Share
தர்மபுரி: கூட்டுறவு சங்கத்தில், ரூ.45 லட்சம் மோசடி செய்ததாக மாஜி தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் கூட்டுறவு கடன் சங்கம், மருதிபட்டியில் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் கடந்த, 2014 செப்.,16 முதல், 2019 நவ.,14 வரை, 45 லட்சத்து, 31 ஆயிரத்து, 472 ரூபாய் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து துணைப்பதிவாளர் மணிகண்டன், தர்மபுரி வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசாரிடம் புகார் செய்தார். விசாரணை நடத்தி வந்த இன்ஸ்பெக்டர் கற்பகம், முறைகேட்டில் ஈடுபட்ட அப்போதைய கூட்டுறவு செயலாளர் அரூர் அடுத்த தேக்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி, எழுத்தாளர்களான வெள்ளாம்பட்டியை சேர்ந்த சிவலிங்கம், கணபதிபட்டியை சேர்ந்த கருணாநிதி மற்றும் கூச்சனூரை சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்க சங்க தலைவர் பார்த்தீபன் ஆகியோரை கைது செய்தனர். இதில், எழுத்தாளர்கள் இருவரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement