dinamalar telegram
Advertisement

சின்னாறு அணையை ஆய்வு செய்த கலெக்டர்

Share
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவு, 52 அடி. இந்த அணையிலிருந்து மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தர்மபுரி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் உள்ள, 250 கிராமங்களின், 4,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. 150க்கும் மேற்பட்ட ஆறு, ஏரி, குளம், குட்டை மற்றும் தும்பல அள்ளி அணை ஆகியவற்றின் நீர் ஆதாரமாக சின்னாறு அணை உள்ளது. கடந்த, 12 ஆண்டுகளாக போதிய மழையின்றி வறண்டு கிடந்தது. தற்போது பெய்து வரும் மழையால் அணை நீர்மட்டம், 42 அடியை எட்டியுள்ளது. தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி நேரில் சென்று அணையை பார்வையிட்டார். மேலும் அணையின் ழுழு விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாவட்ட கவுன்சிலர் கவிதாசரவணன், கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், பஞ்சப்பள்ளி பஞ்., தலைவர் நாராயணசாமி, பாலக்கோடு தாசில்தார் பால முருகன், நீர் வளத்துறை உதவி பொறியாளர் சாம்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement