dinamalar telegram
Advertisement

வெளி மாநில வரத்தால் தக்காளி விலை குறைவு

Share
பாலக்கோடு: பாலக்கோட்டிற்கு, வெளி மாநில தக்காளி வரத்தால் அதன் விலை குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் பெய்து வரும் மழையால், தக்காளி வரத்து பெருமளவு குறைந்தது. இதனால் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ தக்காளி, 120 ரூபாய் வரை விற்பனையானது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது. இதனால், 15 கிலோ கூடை தக்காளி அதிகபட்சம், 1,200 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் பாலக்கோட்டிற்கு சில தினங்களாக கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து துவங்கி உள்ளதால், அதன் விலை படிப்படியாக குறைய துவங்கியது. இதனால் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நேற்று, 15 கிலோ கூடை தக்காளி, 550 முதல், 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வெளி மாவட்ட வியாபாரிகள் தக்காளி வாங்கி செல்கின்றனர். தக்காளி விலை படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement