dinamalar telegram
Advertisement

காரிமங்கலத்தில் உணவகங்களில் ஆய்வு

Share
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் காரிமங்கலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ரோடு, புறவழிச்சாலை, மொரப்பூர் ரோடு, பெரியாம்பட்டி, கரகோடள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபா, சாலையோர பாஸ்ட் புட் கடைகளில் ஆய்வு செய்தனர். உணவகங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாள்பட்ட இறைச்சிகளை குளிர்பதன பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது. சமையல் எண்ணெய் ஓரிரு முறைக்கு மேல் சூடுபடுத்தி பயன்படுத்த கூடாது என வலியுறுத்தப்பட்டது. ஓரிரு பாஸ்ட் புட் மற்றும் உணவகங்களில் இருந்த, செயற்கை நிறமூட்டி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். உணவு பொருள் பற்றிய புகார்களுகளுக்கு மாநில வாட்ஸ் ஆப் எண் 9444042322 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement