dinamalar telegram
Advertisement

அங்கன்வாடி மையத்துக்கு சீர் வரிசை வழங்கல்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், இளங்குழந்தை பராமரிப்பு சேவைக்கான கூட்டமைப்பு, கடத்தூர் தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து மணியம்பாடி, போளையம்பள்ளியில் உள்ள இரு அங்கன்வாடி மையங்களுக்கு சீர்வரிசை வழங்கும் விழா நடந்தது. தொண்டு நிறுவன தலைவர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். அப்போது, பழுதடைந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேன்டும். மையங்ளை சமுதாய பங்கேற்புடன் வலுப்படுத்துவது, மைய சேவைகளை தரமானதாக கிடைக்க செய்வது, அங்கன்வாடி அளவிலான சட்டபூர்வ குழுக்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் சார்பில், அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தொன்டு நிறுவன பணியாளர்கள் லட்சுமி, ஷர்மிளா, சங்கீதா, சென்னம்மாள், மற்றும் பஞ்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement