dinamalar telegram
Advertisement

கருப்பு கல் சுரங்கத்திற்கு கருத்து கேட்பு கூட்டம்

Share
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தென்கரைக்கோட்டை சமுதாய கூடத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில், ஜம்மனஹள்ளி பஞ்.ல் கல்சுரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டி மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் டி.ஆர்.ஓ., அனிதா தலைமையில் நடந்தது. ஜம்மனஹள்ளி கருப்பு கல் சுரங்கத்தின் பணிகள் துவக்கப்படும் பட்சத்தில், பூர்வீக பணிகள் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வண்ணம் நடைபெறும் என, கனிம வள துணை மேலாளர் கணேசன் பொதுமக்களிடம் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கோட்ட மேலாளர் மகேந்திரன், ஜவஹர், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர்கள் சாமுவேல், ராஜ்குமார், தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement