dinamalar telegram
Advertisement

பட்டு கூடு அங்காடிக்கு விவசாயிகள் வருகை அதிகரிப்பு

Share
தர்மபுரி: தர்மபுரி அரசு பட்டு கூடு அங்காடிக்கு, குறைந்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், 10 ஆயிரம் ?ஹக்டேரில் விவசாயிகள் மல்பெரி விவசாயம் செய்து வருகின்றனர். தொடர் மழையால், தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு விவசாயிகளின் வருகை குறைந்திருந்தது. தற்போது மழை குறைந்தால், பட்டு ஏலத்துக்கு விவசாயிகள் அதிகரித்து வருகின்றனர். கடந்த, 22ல், ஆறு விவசாயிகளும், 23ல் ஒன்பது விவசாயிகளும் பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம், 22 பேர், நேற்று, 38 பேர் வெண் பட்டுக்கூடுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இவர்கள், 75 குவியல்களாக, 2,658 கிலோ கூடுகளை கொண்டு வந்தனர். சராசரியாக, 519 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தால் நேற்று மட்டும், 20 ஆயிரத்து, 714 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement