dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம் நடத்திய 54 பேர் மீது வழக்கு

Share
தர்மபுரி: தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று முன்தினம், சி.பி.எம்., நகர செயலாளர் ஜோதிபாசு தலைமையில், சேதமான ரயில்வே சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு, மாவட்ட செயலாளர் குமார் உட்பட, 20 பேர் பங்கேற்றனர். கொரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 20 பேர் மீது, தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இதே போன்று தர்மபுரி நுகர் பொருள் வாணிப கழக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட, ஏ.ஐ.சி.சி.டி.யூ., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் உட்பட, 20 பேர் மீதும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து, அனுமதியின்றி நோட்டீஸ் வழங்கிய மகளிர் காங்., மாவட்ட தலைவர் காளியம்மாள் உட்பட, 14 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement