dinamalar telegram
Advertisement

பெண்ணை கடத்தியவர் கைது

Share
சேலம்: கல்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 31. இவரது மனைவி இந்துமதி, 28. இவர், இரு மகன்களுடன், கடந்த ஆக., 30ல் மாயமானார். அவர்களை, மனைவியின் தங்கை கணவரான, காமநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயகாந்த், 28, கடத்தியதாக, ராஜா அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் கந்தம்பட்டியில் நின்றிருந்த விஜயகாந்திடம், மனைவியை ஒப்படைக்குமாறு ராஜா கேட்டார். அதில், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ராஜா புகார்படி, சூரமங்கலம் போலீசார் விஜயகாந்தை கைது செய்து, இந்துமதி, இரு குழந்தைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement