dinamalar telegram
Advertisement

4,500 கர்ப்பிணிக்கு சீர்வரிசை

Share
சேலம்: சமூக நலன், மகளிர் உரிமை துறையின், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டம் சார்பில், கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு விழா, சேலத்தில் நேற்று நடந்தது. அதில், கலெக்டர் கார்மேகம் பேசியதாவது: சமுதாய வளைகாப்பில், 200 கர்ப்பிணியருக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் வழங்கப்பட்டு, வளைகாப்பு நடத்தப்படுகிறது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள, 22 வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் மூலம், அந்தந்த சட்டசபை தொகுதி பகுதிகளில், 4,500 கர்ப்பிணிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி, வளைகாப்பு நடத்தப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாகவும், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் உள்ள மாநிலமாகவும் மேம்படுத்த, கர்ப்பிணியருக்கு வளைகாப்பு, வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம், பாரம்பரிய உணவு திருவிழா, தாய்ப்பால் வாரவிழா நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகின்றன. குழந்தையின், 2 வயதுக்குள் ஏற்படும் ஆரோக்கியம், வளர்ச்சி குறைபாட்டை திரும்ப சரி செய்வது கடினம். அதனால், முதல் இரு ஆண்டுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சேலம் எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement