dinamalar telegram
Advertisement

ஸ்ரீபெரும்புதூரில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு

Share
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் 1,500 பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொட்டலங்களளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

மகப்பேறு நலத்திட்ட உதவியாக, பெண்களுக்கு 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டிகள், அங்கன்வாடிகள் வாயிலாக, வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதாரில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பங்கேற்று, குத்து விளக்கு ஏற்றினார். பின், ஊட்டச்சத்து உணவு பெட்டிகள் வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மொபிஸ் இந்தியா நிறுவனம், சேவை மற்றும் ஔி இந்தியா தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து சி.எஸ்.ஆர்., திட்டத்தின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐ.சி.டி.எஸ்., திட்ட அதிகாரி சங்கீதா, மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் பொதுமேலாளர் ரியு ஜே இன், லட்சுமணன், சுப்பிரமணி, சரவணகுமார், வீரப்பன், ஜெகதீஷ், ஜானகிராமன், மற்றும் ஔி இந்தியா தினேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement