dinamalar telegram
Advertisement

பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடத்தில் ரூ.485 கோடி முதலீடு; 1,960 பேருக்கு வேலை

Share
சேலம்: ''பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் மூலம், 485 கோடி ரூபாய் முதலீடு, 1,960 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளன,'' என, தமிழக தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசினார்.
சேலத்தில், பாதுகாப்பு தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைப்பது குறித்து, தொழில் நிறுவன ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், தமிழக தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் அமைப்பதற்கான முயற்சி யில் தொழில் முதலீட்டு கழகம், சி.ஐ.ஐ., - எஸ்.ஐ.டி.எம்., ஆகிய தொழில் கூட்டமைப்புகளோடு, நவ., 1ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 485 கோடி ரூபாய் முதலீடு, 1,960 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், வான்வெளி, பாதுகாப்பு துறையில் உதிரிபாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கோவை, சென்னை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய இடங்களில் அமைய உள்ளன. பாதுகாப்பு தொழிற்துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த, ஒரு திறன்மிகு மையத்தை, 'டிட்கோ' நிறுவனம், 'டசோ சிஸ்டம்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து நிறுவ உள்ளது. தமிழகம் முழுதும், 212 கோடி ரூபாய் முதலீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இத்திறன்மிகு மையத்தில், பொருள் வடிவமைப்பு, உற்பத்தி மேம்பாடு, புரோட்டா டைப்பிங், திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு போன்ற செயல்திறன், தொழில் முனைவோருக்கு வழங்கப்படும். ஏற்கனவே இயங்கிவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் பயனாக இருக்கும். முதல்வர் தொலைநோக்கு பார்வைப்படி, தமிழக பொருளாதாரம், 2030க்குள், ஒரு டிரில்லியன் டாலராக அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் கார்மேகம், எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தமிழ்நாடு சிறு, குறு தொழில் கூட்டமைப்பு தலைவர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement