dinamalar telegram
Advertisement

கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை

Share
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரே வசித்து வருபவர் தங்கராஜ். இவரது மனைவி தேவி (30). இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியுள்ளார். கடனை திரும்ப செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவி சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தேவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement