dinamalar telegram
Advertisement

நெல்லை அருகே நாமக்கல் லாரி டிரைவர் திடீர் சாவு

Share
திருநெல்வேலி: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் இளங்கோவன் (42). லாரி டிரைவர். இவர் நேற்று நாமக்கல்லில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு நெல்லை வழியாக சென்று கொண்டிருந்தார். இதையடுத்து இரவு கங்கைகொண்டான் சிப்காட் நான்கு வழிச்சாலையில் வந்தபோது லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக லாரியில் ஏறி இளங்கோவன் தூங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவரை நடத்துனர் எழுப்பிய போது அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது இளங்கோவன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement