dinamalar telegram
Advertisement

ஆர்ப்பாட்டம்

Share
சங்ககிரி: சங்ககிரியில் உள்ள சரக கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தாலுகா செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், தாலுகா பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க வேண்டும்; தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் தங்க நகைகளை உடனே வழங்க வேண்டும் என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின், துணைப்பதிவாளர் முத்துவிஜயாவிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement