dinamalar telegram
Advertisement

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு

Share
சேலம்: சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், இளைஞரணி செயலர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, இடைப்பாடி, மேட்டூர், சங்ககிரி தொகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், நவ., 27ல்(நாளை) பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். மேலும், மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, ரத்த தானம், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, தூய்மை பணியாளர்களுக்கு மழைக்கால உடை, மளிகை பொருட்கள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement