dinamalar telegram
Advertisement

குரங்குகளை பிடிக்க பணம் கேட்டு தண்டோராவால் விசாரணை

Share
தம்மம்பட்டி: தம்மம்பட்டி, உலிபுரத்தில், நேற்று முன்தினம் ஒருவர், 'தண்டோரா' போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 'குரங்கு தொல்லை அதிகளவில் உள்ளதால் வனத்துறை மூலம் பிடிக்க, வீட்டுக்கு, 100 ரூபாய், கடைக்கு, 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என தெரிவித்தார். இதுகுறித்து கெங்கவல்லி ஒன்றிய பி.டி.ஓ., ராஜேந்திரன்(கி.ஊ.,) உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், நேற்று விசாரித்தனர். இதுகுறித்து, பி.டி.ஓ., கூறுகையில், ''போதையில் ஒருவர் தண்டோரா போட்டதாக தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement