dinamalar telegram
Advertisement

கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலுக்கு தங்க தேர்: அறநிலையத்துறையிடம் ஒப்படைத்த அறக்கட்டளை

Share
இடைப்பாடி: கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம் செய்யப்பட்ட தங்க தேர், செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி, கல்வடங்கம், அங்காளம்மன் கோவிலில், மாசியில் தேரோட்டம் நடக்கும். அதனால், கல்வடங்கம் அங்காளம்மன் வழிபாட்டு அறக்கட்டளை மூலம், தங்கத்தேர் அமைக்கும் பணி, 2015 ஆக., 16ல் தொடங்கியது. தலைவர் மோகனசுந்தரம் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர். கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அப்பணி, கடந்த ஆண்டு முடிந்தது. முதலில், தேரில் செம்பாலான தகடு செய்யப்பட்டு, பின், 5 அடுக்கு தங்கத்தகடு ஒட்டப்பட்டது. 6 கிலோ தங்கத்தால் தேர் செய்யப்பட்டது. முழுமை அடைந்த தங்க தேரை, கோவில் செயல் அலுவலர் கோகிலா, பரம்பரை அறங்காவலர் மகிபாலனிடம், நேற்று அறக்கட்டளை தலைவர் மோகனசுந்தரம், செயலர் முத்துசாமி, பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் ஒப்படைத்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புதலோடு, மார்ச்சில் தேரோட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறக்கட்டளை மூலம் தங்கம், நிதியுதவி பெற்று தங்க தேர் செய்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்ததாக, அதன் நிர்வாகிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement