dinamalar telegram
Advertisement

ஓட்டு வீடு சரிந்தபோது சாமர்த்தியமாக 7 பேர் உயிரை காப்பாற்றிய டிரைவர்

Share
சேலம்: ஓட்டு வீட்டின் மேற்பகுதி சரிந்த நிலையில், விட்டத்தை தாங்கி பிடித்து ஆட்டோ டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஏழு பேர் உயிரை காப்பாற்றினார். அவரை, போலீசார் பாராட்டினர்.
சேலம், அம்மாபேட்டை, மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 35; ஆட்டோ டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வாடகைக்கு வசிக்கிறார். இவரது தாய் கமலா, 65, மனைவி சத்யா, 32, மகன் சஞ்சித், 8, மகள் பிருந்தா, 7, சகோதரி மீனாட்சி, 30, அவரது மகன்கள் சங்கர், 7, கனி, 5. இந்த ஏழு பேரும், நேற்று முன்தினம் வீட்டுக்குள் தூங்கிய நிலையில், கண்ணன் வீட்டின் வெளியே தூங்கினார். சில நாளாக மழையால் வீட்டின் சுவர் அதிகளவில் நனைந்திருந்த நிலையில், நேற்று காலை, 3:30 மணிக்கு, அதன் ஒருபுற சுவர் இறங்கி, மேற்பகுதியின் விட்டம் சரிய தொடங்கியது. சத்தம் கேட்டு விழித்த கண்ணன், உடனே சுதாரித்து, விட்டத்தை தாங்கி பிடித்து கூச்சலிட்டார். இதனால், வீட்டில் படுத்திருந்தவர்கள் விழித்து அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அனைவரும் வெளியேறிய பின், கண்ணன் விட்டத்தை விட்டார். அவர் சாமர்த்தியத்தால், குடும்பத்தினர், 7 பேர் உயிர் தப்பினர். இதையறிந்த அம்மாபேட்டை போலீசார், ஆட்டோ டிரைவரை வெகுவாக பாராட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement