dinamalar telegram
Advertisement

சிலிண்டர் விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு நிவாரணத்தொகை

Share
சேலம்: சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. சேலம், தாதகாப்பட்டி பாண்டுரங்கன் விட்டல் தெருவில், கடந்த, 23ல், காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. அதில், 5 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். முதல்வர் ஸ்டாலின், இறந்தோரின் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவித்தார். அதன்படி, இறந்தவர்களான பத்மநாபன், தேவி, கார்த்திக்ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகியோரின் குடும்பத்தினரிடம், நேற்று, தலா, 5 லட்சம் ரூபாய் காசோலையை, கலெக்டர் கார்மேகம் வழங்கினார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, 13 பேருக்கும் நிவாரணத்தொகை காசோலையாக வழங்கப்பட்டது. எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement