dinamalar telegram
Advertisement

கரியகோவில் அணை நிரம்பி உபரி நீர் திறப்பு

Share
ஆத்தூர்: தொடர் மழையால், வாழப்பாடி, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை நீர் மட்டம், நேற்று முன்தினம், 65.45 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து, 110 கன அடி நீர், வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. அதேபோல், பாப்பநாயக்கன்பட்டியில் கரியகோவில் அணை, 52.49 அடி உயரத்தில் உள்ளது. நேற்று, 50.52 அடியாக நீர்மட்டம் உயர்ந்து, 175.60 மில்லியன் கன அடி நீர் உள்ளது. வினாடிக்கு, 100 கன அடி தண்ணீர் வருகிறது. 2016ல் கரியகோவில் அணை நிரம்பியது. 5 ஆண்டுக்கு பின் நேற்று அணை முழுமையாக நிரம்பியது. இதையடுத்து, ?? கனஅடி உபரி நீர் பொதுப்பணித்துறையினரால் திறந்து வைக்கப்பட்டது. இதனால், ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா தலைமையில் வருவாய்த்துறையினர், பேளூர், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல் வழியாக செல்லும் வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முற்றுகையிட்ட விவசாயிகள்: வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள ஏரி, குளம், தடுப்பணைகள் நிரம்பி விட்டதால், வசிஷ்ட நதியில் திறக்கப்படும் உபரிநீர் பயன்பாடின்றி பாய்ந்து சென்று கடலில் கலக்கிறது. இதனால், வாழப்பாடி பகுதி விவசாயிகள் நலன் கருதி, உபரிநீரை, அணையின் வலது, இடது பாசன வாய்க்காலில் திறக்கக்கோரி, ஆனைமடுவு அணையை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டனர். வாழப்பாடி போலீசார், பொதுப்பணித்துறையினர் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தி அனுப்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement