dinamalar telegram
Advertisement

மின் கசிவு காரணமாக ஈரோடு மில்லில் தீ

Share
ஈரோடு: ஈரோடு எல்லப்பாளையத்தில், விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான காட்டன் கன்ட்ரி டெக்ஸ் என்ற பெயரில் இயங்கும் மில்லில், 10க்கும் மேற்பட்ட தறிகள் இயங்கி வருகின்றன. நேற்று காலை, 6:15 மணியளவில் தறிகள் இயங்கி கொண்டிருந்த பகுதியில் இருந்து அதிகளவில் கரும்புகை வந்தது. அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து வெளியே ஓடினர். ஈரோடு தீயணைப்பு துறையினர் வருவதற்கு முன்பே, தொழிலாளர்கள் சிலர் இயந்திரத்தில் இருந்த ஜவுளியில் தீப்பிடித்ததை அறிந்து கிழித்து அகற்றினர். தீ விபத்தில் நான்கு இயந்திரங்களில் சேதம் ஏற்பட்டது. இயந்திரத்தில் இருந்த ஜவுளிகளும் எரிந்து சாம்பலானது. மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சேத மதிப்பு கணக்கிடப்படுகிறது. தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement