dinamalar telegram
Advertisement

மலைச்சரிவில் சறுக்கி விழுந்த ஆண் யானை உயிரிழப்பு

Share
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட சத்தியமங்கலம் வனச்சரகம் குத்தியாலத்தூர் காப்புக்காடு, ராமர் போலி வனப்பகுதியில் வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. சத்தியமங்கலம் ரேஞ்சர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில், யானையின் உடலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் அசோகன் பிரேதபரிசோதனை செய்தார். மருத்துவ அலுவலரின் அறிவுரைப்படி, யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாக வனப்பகுதியிலேயே விடப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில், 'இறந்து கிடந்தது 25 வயதுள்ள ஆண் யானை. வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக மலைச்சரிவில் இருந்து சறுக்கி விழுந்துள்ளது. இதில் தந்தங்கள் அடிபட்டு உடைந்த நிலையில் யானை இறந்தது தடயங்கள் மூலம் தெரிய வந்தது. யானையின் உடலில் இருந்து இரண்டு தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது'என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement