dinamalar telegram
Advertisement

சேர்மன் மீது நடவடிக்கை எப்போது? யூனியன் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Share
அந்தியூர்: சேர்மன் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அம்மாபேட்டை யூனியன் கவுன்சிலர்கள், 11 பேர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அம்மாபேட்டை யூனியன் கூட்டம், அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. சேர்மன் விஜய நிர்மலா, 1? கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 69 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் கையொப்பமிட வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால், கையெழுத்திட மறுத்து, 11 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் கூறியதாவது: ஊராட்சி ஒன்றிய குழு தலைவரை நீக்க, ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி, கலெக்டரிடம் இரண்டு முறை மனு கொடுத்துள்ளோம். மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement