dinamalar telegram
Advertisement

சாயப்பட்டறைகளில் ஆய்வு

Share
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கிருந்து சாயக்கழிவுகளை நேரடியாக சாக்கடையில் கலந்து விடுவதாகவும் சாயக்கழிவுடன் சாக்கடை நீர் பவானி ஆற்றில் கலப்பதால் பவானி ஆறு மாசடைவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு துறைக்கு பொதுமக்கள் தரப்பில் புகார்கள் சென்றது. இதையடுத்து ஈரோடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கோட்டுவீராம்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவில் வீதியில் செயல்படும் சாயப்பட்டறைகளில் நேற்று ஆய்வு செய்தனர். சாயக்கழிவுகளை நேரடியாக சாக்கடையில் வெளியேற்றக்கூடாது என்றும் கழிவு நீரை சுத்திகரித்து சாக்கடையில் வெளியேற்ற வேண்டும் என சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement