பு.புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி கால்நடை சந்தை நேற்று கூடியது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்ட எல்லையில் உள்ள இந்த சந்தைக்கு, 110 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டன. ஐந்து முதல் 12 கிலோ வரையிலான வெள்ளாடுகள் 2,500 முதல், 6,000 ரூபாய் வரையும், ஐந்து முதல், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், 2,500 முதல் 5,000 ரூபாய் வரையும் விலை போனது. கார்த்திகை மாத விரதம் கடைபிடிக்க படுவதால் இறைச்சி கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் வருகை குறைவாகவும், ஆடுகள் விற்பனை மந்தமாகவும் இருந்தது. சந்தைக்கு, 200 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!