dinamalar telegram
Advertisement

மலைவாழ் குழந்தைகளுக்கு ரூ.1.48 லட்சம் நிதியுதவி

Share
ஈரோடு: டி.என்.பாளையம் யூனியன், வளையப்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மலைவாழ் குழந்தைகளுக்காக, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்டவைகளுக்காக, 1.48 லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது. கோபி ஸ்டேட் பாங்க் கிளை சார்பில், இதற்கான காசோலையை, பள்ளி தலைமை ஆசிரியர் தனபாக்கியத்திடம், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கி கூறியதாவது: ஈரோடு உட்பட, 15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுகிறது. தொட்டப்பாளையத்தில் மாணவ, மாணவியர், 24 பேர் படிக்கின்றனர். இக்குழந்தைகள், 8 ம் வகுப்புக்குப்பின், வளையபாளையம் உயர்நிலைப்பள்ளியில் முறைசாரா கல்வியில் படிப்பை தொடர்கின்றனர். இதனால், இப்பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ், தொலைக்காட்சி அமைக்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement