dinamalar telegram
Advertisement

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைகிறது

Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு பகுதியில் இருந்து தக்காளி வரத்தானதால், ஒரு கிலோ, 60 முதல், 80 ரூபாய்க்கு விற்பனையானது.
தொடர் மழையால், தமிழகத்தில் தக்காளி ஒரு கிலோ, 110 முதல், 130 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது. நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி அதிகமாக வரத்தானதால், ஒரு கிலோ, 60 முதல், 80 ரூபாய்க்கு குறைந்தது. இதுபற்றி, தக்காளி வியாபாரிகள் கூறியதாவது: ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும், 2 ஆயிரம் முதல், 3 ஆயிரம் பெட்டிகளில் தக்காளி வரத்தாகும். நேற்று ஈரோடு மாவட்டம் தாளவாடி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி, ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற பகுதிகளில் இருந்து, 7 ஆயிரம் பெட்டிகள் வரை தக்காளி வரத்தானது. இதில், 14 கிலோ தக்காளி பெட்டி, 650 ரூபாய் முதல், 700 ரூபாய்க்கும், 28 கிலோ எடை கொண்டு பெட்டி, ஆயிரம் முதல், 1,050 ரூபாய்க்கும் மொத்த விலையில் விற்பனையானது. சில்லரை விலையில், ஒரு கிலோ தக்காளி, 60 முதல், 80 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. தவிர, வடமாநிலங்களில் இருந்தும் தக்காளி லோடு கேட்கப்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்களுக்கு பல பகுதியில் இருந்தும் தக்காளி வரத்தாகி, விலை இதைவிட குறையும். இவ்வாறு கூறினர்.

சிந்தாமணியில் ரூ.75: ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கூறுகையில், 'கூட்டுறவு துறை அமைச்சர் உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் ஈரோடு சிந்தாமணி பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடியில் குறைந்த விலையாக கிலோ, 75 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement