dinamalar telegram
Advertisement

ஈங்கூரில் புதிய கூட்ஸ் ஷெட்: ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி

Share
ஈரோடு: ''ஈங்கூரில் புதிய கூட்ஸ் ?ஷட் அமைக்கப்படும்,'' என, சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கூறினார்.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், சேலம் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு ரயில்வே நுழைவு பாலத்தில் உள்ள குறைகள், அங்குள்ள பிரச்னைகளை தொழில்நுட்ப உதவி மூலம் களைய புதிய திட்டம் வகுக்கப்படும். சேலம் - கோவை இடையே பாசஞ்சர் ரயில் இயக்க வேண்டும் என, பயணிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நெரிசல் உள்ள ரயில்களில் மட்டும் பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஈங்கூரில் புதிதாக ரயில்வே கூட்ஸ் ?ஷட் (சரக்கு போக்குவரத்து முனையம்) அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணி நடந்து வருகிறது. ஈரோட்டில் உள்ள கூட்ஸ் ?ஷட்டும் தொடர்ந்து செயல்படும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இடப்பற்றாக்குறையால், பிளாட்பார்ம் விரிவுபடுத்துவது தற்போதைக்கு இயலாது. ஆனால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு வசதி, மேம்பாட்டு வசதி மேற்கொள்ளப்படும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், 'சிசிடிவி' கேமரா அனைத்து பகுதிகளிலும் விரைவில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement