dinamalar telegram
Advertisement

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Share
ஈரோடு: ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சி, 45வது வார்டு பழைய பூந்துறை ரோட்டில் வாராந்திர ஜவுளி சந்தையும், ஏராளமான வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளன. சாலையில் ஏராளமான வியாபாரிகள் விளம்பர தட்டிகளை வைத்தும், சிலர் சாலைகளை ஆக்கிரமித்தும் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், ஜவுளி சந்தை கூடும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையானது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் போனது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பழைய பூந்துறை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று காலை அகற்ற வந்தனர். வியாபாரிகள் சிலர் தாமாக முன் வந்துஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்புறப்படுத்தப்படாதவற்றை அதிகாரிகள் அகற்றினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement