dinamalar telegram
Advertisement

சேலம் ரயில்வே கோட்ட மேலாளரிடம் எம்.பி., மனு

Share
ஈரோடு: ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி நேற்று ஈரோட்டில் சேலம் டி.ஆர்.எம். கவுதம் சீனிவாசிடம் அளித்த மனு: ஈரோடு காந்திஜி ரோட்டில் இருந்து நாடார் மேடு செல்ல உயர்மட்ட மேம்பாலத்தை மாநில நெடுஞ்சாலை துறை கட்டி கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இங்குள்ள கீழ் நிலை சாலையில் மழை காலத்தில் மழை நீர் தேங்குகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஈரோடு காளை மாட்டு சிலை பகுதியில் இருந்து ரங்கம்பாளையம் நுழைவு பாலம் வரை மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலையை விரிவாக்கம் செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement