dinamalar telegram
Advertisement

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 1650 புள்ளிகள் சரிவு

Share
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(நவ., 26) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 1650 புள்ளிகள் வீழ்ச்சி கண்டன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மீதான அச்சம் மற்றும் முன்னணி நிறுவன பங்குகள் பெருமளவில் சரிந்ததால் இன்றைய வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. தொடர்ந்து சரிந்து கொண்டே போன பங்குச்சந்தைகள் காலை 11 மணியளவில் 1400 புள்ளிகள் சரிவை சந்தித்தன பிறகு 11.30 மணியளவில் 1200 புள்ளிகள் சரிவு என்ற நிலையில் வர்த்தகமானது. காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் 1111.62 புள்ளிகள் சரிந்து 57,683.47ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 335 புள்ளிகள் சரிந்து 17,200 ஆகவும் வர்த்தகமாகின.தொடர்ந்து சரிவிலேயே இருந்த பங்குசந்தை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1657.94 பு்ள்ளிகள்சரிந்து 57105.15 ஆகவும் , நிப்டி 509.8 பு்ளிகள் சரிந்து 17026.45 ஆக நிறைவடைந்தது.

சரிவுக்கான காரணம் என்ன?கொரோனா பல நாடுகளில் கட்டுக்குள் வந்தாலும் இன்னும் முழுமையாக தீரவில்லை. இப்போது தென் ஆப்ரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா நோய் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுகிறது. மேலும் ஆசிய பங்குச்சந்தைகளும் சரிவுடன் இருப்பதால் அதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன. இதனால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (26)

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இந்த பங்கு சந்தய்யை வைத்து கொண்டு எதோ ஆஹா ஓஹோ என்று சொல்லி கொண்டிருக்கிறோம். பட்ஜெட் கூட இதையே ஒரு அளவுகோலாக வைத்து போடப்படுகிறது என்று சொல்கிறார்கள். ப்ரோக்கர்களின் விளையாட்டு அரங்கில் அனைத்துமே ஏமாற்று விளையாட்டுகள் தான். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேற்றில் முளைத்த செந்தாமரை போல நல்லவிஷயங்களும் உண்டு. மற்றபடி இதை ஒரு பொருட்டாக கருத வேண்டியதில்லை. புள்ளிகளில் சொல்வதே சரியானதாக இருக்காது. வெறும் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே சென்செக்ஸ் விலை குறைந்திருக்கிறது. இதற்கே வீழ்ச்சி அது இது என்று கூப்பாடு போட்டால் எப்படி. அடுத்த மாதம் டிசம்பரை டிஸ்டாஸ்டர் மதம் என்பார்கள். காரணம் விலை மிகவும் குறைந்து நல்ல விலையில் பங்குகள் கிடைக்கும் அது வியாபாரிகளுக்கு லாபமிருக்காது என்று அப்படி சொல்வார்கள். உண்மையில் அது ஜோக்போட் மாதமல்லவா நல்ல கம்பனியின் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கு.

 • RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ

  திங்களன்று நிலைமையைக் கவனித்து விட்டு செய்வாய்க்கிழமை, அல்லது புதன் கிழமை இன்டராடே வணிகம் செய்து லாபம் சம்பாதிக்க வாய்ப்பு

 • Visu Iyer - chennai,இந்தியா

  நிருபர்கள் யாரும் காஞ்சிபுரத்தை முகாமிடவில்லையா ..? காஞ்சி சங்கர மடத்து செய்திகள் எதுவுமே வரவில்லையே.. கொஞ்சம் அந்த பக்கம் பாருங்க.. அடுத்த மாதத்தில் வ(ள)ரும்..

 • Visu Iyer - chennai,இந்தியா

  காரணம் அது அல்ல.. கொரநா தான் காரணம் என்றால் இதற்கு முன் கடந்த மாதத்தில்.. பங்கு சந்தை உச்சத்தை எட்டியதே.. இதற்கு சோதிட காரணம்.. சொல்ல முடியும் அது தான் காரணம் என்றால் பலரும் கைகொட்டி தான் சிரிப்பார்கள்.. உண்மையை சொன்னால் அப்படி தானே.. சிரிப்பார்கள்.. சரி.. அவர்கள் அப்படியே இருக்கட்டும் நம்ம வழியில் நாம் பயணிப்போம்

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  முல்லா ஒருவன் இங்கே கேள்வி, அதாணி பணக்காரன் ஆனதுக்கும் இதுக்கும் முடிச்சி போட்டு, இன்னைக்கு மிக பெரிய லாஸ் 😭😭😭😭

  • Visu Iyer - chennai,இந்தியா

   அறிவு இருப்பவர்கள் உங்களை போல சிந்திக்க மாட்டார்கள்.. அது சரி அது இல்லை என்று தானே இப்படி பதிவு போடுகிறீர்கள்

Advertisement