dinamalar telegram
Advertisement

அனைவரையும் அரசியல் சாசனம் ஒன்று சேர்க்கிறது: பிரதமர்

Share
புதுடில்லி: ''பெரும் பாரம்பரியம், பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பார்லிமென்ட் மைய மண்டபத்தில், அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய நாள் பார்லிமென்ட்டை வணங்க வேண்டிய நாள். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு வழங்குவதற்காக, பலத்த ஆலோசனைக்கு பிறகு உருவாக்கிய தலைவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மஹாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்து கொள்கிறேன். அரசியல் சாசனத்தை ஏற்படுத்தியவர்களுக்கு நாடே முதன்மையாக இருந்தது.


இந்த நாளில் தான், பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய துக்க நாள். பயங்கரவாதிகளுடன் போரிட்டு தங்கள் உயிரை நீத்த தைரியமிக்க நமது வீரர்களை நினைவு கூர்கிறேன்.


நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல. பெரும் பாரம்பரியம் பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டது.


1950க்கு பிறகு அரசியல்சாசன தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சிலர் அதனை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாள் கொண்டாட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார்.ஜனநாயக நாட்டில் அரசியல் குழுக்கள் மிகவும் முக்கியம்.
இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கிறது. அவ்வாறு செய்ய நினைப்பவர்கள் அரசியல் செய்ய வர வேண்டாம். வாரிசு அரசியல் நமது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன. திறமைகள் அடிப்படையில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக்கூடாது. உட்கட்சி ஜனநாயகத்தை, மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்கும். வாரிசு அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது மதிப்பீடுகளை இழந்துவிட்டன.கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.


அரசியல் கட்சிள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தணடனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருப்பது நமது இளைஞர்களை பெரிதும் பாதிக்கிறது.ஊழல் சங்கிலியை உடைக்க வேண்டும். ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நவீன இந்தியாவிற்கான அடித்தளத்தை மஹாத்மா காந்தி வடிவமைத்தார். அந்த அடித்தளத்தை நாம் மறக்கவில்லை. இன்று மக்கள் தங்களது உரிமைகளை பற்றி பேசுகின்றனர். மக்கள் தங்களது கடமைகளை புரிந்து கொண்டால், அவர்களது உரிமை பதுகாக்கப்படும். நமது அரசியலமைப்பை எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புறக்கணிப்புபார்லிமென்டில் நடந்த அரசியலமைப்பு தினத்தை, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட 14 கட்சிகள் புறக்கணித்தன. அரசியல்சாசனத்தை, பா.ஜ., மதிக்கவில்லை எனவும் அக்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  அதுதான் இது.

 • அறவோன் - Chennai,இந்தியா

  இந்திய அரசியல் சாசனப்படி நம் நாடு அணைத்து மதங்களையும் உள்ளடக்கிய தேசம். மதத்தை முன்னிறுத்தி நாட்டு மக்களை சிறுமைப்படுத்துவதோ, இழித்து பேசுவதோ, அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதோ குற்றம்.

 • அப்புசாமி -

  இவர் என்னத்தைப் பேசினச்லும், கடைசியில் கழநீர் பானையில் கை விட்ட மாதிரி காங்கிரஸ் இதைச்செய்ய வில்லை, அத்சிச் செய்யவில்லைன்னு கூவுறாரு. நீங்க செய்தறதைச் சொல்லுங்க.

  • கிச்சாமி - மங்கலம்

   உண்மை சுடுது போல?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கறிக்கடக்காரன் சைவசோறு சாப்டுங்க, வள்ளலாரு பேச்ச கேளுங்க அப்டீன்னு சொன்னானாம்

 • sankaseshan - mumbai,இந்தியா

  மதவாத அரசியல் செய்வது t4 கட்சி குறுமதியாளர்கள் இறக்குமதியான மதங்களை வைத்து அரசியல் செய்யும் அவர்களை உனக்கு அடையாளம் தெரியவில்லையா சூரி , 26/11 அன்று பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கினர் ,தன் உயிரை கொடுத்து தீவிரவாதி காசபை பிடித்து கொடுத்த துக்காராம் ஓம்பலேயே ஞாபகம் இருக்க உன்னை மாதிரி ஆட்களுக்கு இருக்காது

Advertisement