dinamalar telegram
Advertisement

எம்ஜிஆரின் அண்ணன் மகள் லீலாவதி காலமானார்

Share
Tamil News
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதி, எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியிருந்தார். உடல்நலம் தேறிய பின்னர் விவரம் அறிந்த எம்ஜிஆர், லீலாவதியை ராமாவரம் தோட்டத்து இல்லத்துக்கு அழைத்து நன்றி தெரிவித்தார். எம்ஜிஆரின் வளர்ப்பு மகளாகவும் இருந்தவர் லீலாவதி.
சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்த லீலாவதி இன்று (நவ.,26) அதிகாலை 2 மணி அளவில் திடீரென மரணம் அடைந்தார். இது எம்ஜிஆர் உறவினர்கள், அதிமுக.,வினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா

    உயிரோடு இருக்கும்பொழுது அடுத்தவர்களுக்கு தன்னுடைய உறுப்பை தானம் செய்வதென்பது ஆகச்சிறந்த கொடை. இறைவனடி சேர்வாயாக சகோதரி.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    எம்.ஜி. யாரும், ஜெயா அம்மையாரும் நினைத்திருந்தால் உறவினர்களை எங்கேயோ கொண்டுபோய் வைத்திருக்கலாம். ஆனால், பாவம். அம்மையாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Advertisement