dinamalar telegram
Advertisement

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா

Share
திருப்பூர்: விவசாயிகள் குறைதீர் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. வழக்கமாக இக்கூட்டம் 2வது தளத்தில் உள்ள பெரிய அறையில் நடைபெற்ற நிலையில், இன்று தரைதளத்தில் உள்ள சிறிய அறையில் நடந்தது. அந்த இடத்தில் அதிகாரிகளும், விவசாயிகளும் ஒரே இடத்தில் இருந்து குறைகளை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லை எனவும், ஏற்கனவே குறிப்பிட்டிருந்த குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் கூறி விவசாயிகள் வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலகம் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement