dinamalar telegram
Advertisement

திருப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: மீட்க அறநிலையத்துறை முயற்சி

Share
பொங்கலுார்: திருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது.


திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. சர்வே எண்:105ல் 2.47 ஏக்கர் உள்ளது. இந்த இடம் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.அதனை வைத்து, அவர் பத்திரம் தயார் செய்து விற்று விட்டார். தற்போது அந்நிலத்தில், வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதயை மார்க்கெட் மதிப்பில், நிலம், 10 கோடி ரூபாய் மதிப்புடையது.


இகோவில் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலத்தை வீட்டு மனைகளாக பிரிக்கக்கூடாது; தனியார் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். கோவில் நிலத்தை கோவிலுக்கு தவிர வேறு பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்று, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுகுறித்து, ஹிந்து அறநிலைய துறை அலுவலர்கள் கூறுகையில், 'இந்த நிலம், கடந்த 1912ல் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. 1968ல், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தனியாருக்குப் பட்டா வழங்கப்பட்டது. தற்போதை நிலத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஐடியா கொடுத்ததே அறக்கொள்ளைத்துரை அதிகாரிகளாகத்தான் இருக்கும்

  • S. Narayanan - Chennai,இந்தியா

    நம்ம ஆளு அற நிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மாற்று ஸ்டாலின் இருவரும் எல்லா ஆக்ரமிப்பு நிலங்களையும் மீட்டு விட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆக ஆட்சியாளர்கள் சொல்வது எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

  • jayvee - chennai,இந்தியா

    சட்டம் செய்வதும் சட்டம் ஒழிப்பதும் அரசியல்வாதிகளின் நலனுக்காக மட்டுமே.. மக்களுக்காக அல்ல.. குறிப்பாக தமிழகத்தில் ஹிந்துக்களுக்காகவோ அல்லது ஹிந்து கோவில்களை கப்பருவதற்க்காகவோ அல்ல என்பது கடந்த எழுபது ஆண்டு திராவிட ஆட்சிகளில் நாம் கண்ட உண்மை

    • E Mariappan - ,

      திராவிட ஆட்சி வந்து 54 ஆண்டு ஆகிறது. பொய்க்கு பிறந்தவன்

  • Narayana Rao -

    வெளீச்சேரி - இல் உள்ள பல இடங்கள் தண்டீஸ்வரன் கோவிலுக்கு உரியது. தாண்டீஸ்வரன் காலனி என்ற பெயரும் உண்டு. பாதி சிவன் கோவில் உரியது மீதி எரியை அக்ரமித்து கட்டப்பட்டவை. இதை எல்லாம் கேட்பார் யாரும் இல்லை.

  • Suppan - Mumbai,இந்தியா

    வருடத்தப் பார்த்தீர்களா? 1968 வேற யாரு ஆட்சியிலே இருந்தாங்க ? நம்ம ஊழல் சக்ரவர்த்திதான். சகட்டு மேனிக்குப் பட்டா போட்டுத் தள்ளியிருக்காங்க.

    • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

      அதுக்கப்புறம் யார் ஆட்சியில இருந்தாங்க?

Advertisement