dinamalar telegram
Advertisement

பலாத்கார குற்றவாளிகளின் துாக்கு ஆயுள் தண்டனையாக மாற்றம்

Share
மும்பை : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள 'சக்தி மில்ஸ்' வளாகத்தில் 2013ல், பத்திரிகை புகைப்பட பெண் கலைஞர் பலாத்கார வழக்கில், மூன்று பேருக்கு வழங்கப்பட்ட துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


@மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் புறநகரில் பயன்படுத்தாமல் இருந்த சக்தி மில்ஸ் வளாகத்தில், 2013ல், 22 வயது புகைப்பட பெண் கலைஞர், ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த வழக்கில் மூன்று பேருக்கு துாக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனை, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க உத்தரவிடப்பட்டது.


தங்களுக்கு அளிக்கப்பட்ட துாக்கு தண்டனையை எதிர்த்து, மூன்று குற்றவாளிகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், உடலளவில் மட்டுமல்ல, மனதளவிலும் வாழ்நாள் முழுதும் பாதிக்கப்படுகிறார். இதுபோன்ற கொடூர குற்றம் செய்த இவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது சரியான தீர்ப்பாக இருக்கும். ஆனாலும் இவர்கள் வாழ்நாள் முழுதும் சிறையில் அடைக்கப்பட்டால் தான், தாங்கள் செய்த தவறை நினைத்து தினமும் வருந்துவதற்கு வாய்ப்பாக இருக்கும்.இவர்கள் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு தகுதியற்றவர்கள். அதனால் இவர்களுக்கு 'பரோல்' போன்ற சலுகைகள் வழங்கக் கூடாது. இறக்கும் வரை சிறையிலேயே இருக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement