dinamalar telegram
Advertisement

ஸ்ரேயாஸ் சதம்; இந்திய அணி 345 ரன்னுக்கு ஆல்அவுட்

Share
கான்பூர்: நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நேற்று (நவ.,25) துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாளில் சுப்மன் கில், ஜடேஜா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். முதல்நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாம் நாளான இன்று போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் ஜடேஜா (50) அவுட்டானார். அடுத்து வந்த சஹா (1) நிலைக்கவில்லை. பின்னர் வந்த அஸ்வின் கைகொடுக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் விளாசி 105 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தீ 5, ஜேமிசன் 3, படேல் 2 விக்கெட் வீழ்த்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • தத்வமசி - சென்னை ,இந்தியா

    வாழ்த்துக்கள் சிரேயஸ். மிக நீண்ட வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் அறிமுக போட்டியிலேயே நூறு கண்ட ஆட்டக்காரர். சாதனை வீரர்கள் வரிசையில் சிரேயஸ்.

Advertisement