dinamalar telegram
Advertisement

41. சிறை மீட்க போராட்டம்

Share
Tamil News
சிறையில் இருந்து வெளிவந்ததும் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார் நேதாஜி. கோல்கட்டா நகர மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதில் மும்முரம் காட்டினார்.


மேயர் பணி ஏற்றுக்கொண்டதால் அவருடைய விடுதலைப் போராட்டத்தில் அவருடைய செயல்பாடுகள் நின்றுவிடவில்லை. மாறாக தீவிரமாக தொடர்ந்து கொண்டே இருந்தது. சிறைக்கைதிகளின் நலனில் பெரிதும் அக்கறை காட்டினார். அவர்கள் விடுதலை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டார். இந்த சமயத்தில், அகில இந்திய காங்கிரஸ் தொழிற் சங்கத்தின் தலைவராகவும் நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கோல்கட்டா நகர மேயர் ஆனவுடன் அரசியல் கைதிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் விடுதலைக்காக அவர் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் காந்தி அவருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இறுதியில் எல்லா போராட்டங்களையும் தாண்டி பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.



(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement