dinamalar telegram
Advertisement

கமிஷன் வாங்கும் கலெக்டர் : காங்., எம்.பி கடிதம்

Share
Tamil News

கரூர் : கரூர் கலெக்டர் அலுவலத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்., எம்.பி., ஜோதிமணி, தலைமைச் செயலர் இறையன்புக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.




அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை என் முன்னெடுப்பில் செயல்படுத்தினால், ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்பதால், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, கலெக்டர் பிரபுசங்கர் மறுக்கிறாரா என தெரியவில்லை.மேலும், கலெக்டர் பிரபுசங்கர் மேஜையில், 1 முதல், 2 சதவீதம் வரை கட்டாய வசூல் முடித்த பின்தான் கோப்புகள் நகரும் என மக்கள் மத்தியில் பரவலான அபிப்ராயம் உள்ளது. அரசு முறையான விசாரணைக்கு உத்தரவிட்டால் உண்மை வெளிப்படும்.

கடந்த ஆட்சியிலும் திட்டங்களை செயல்படுத்த நடத்திய போராட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆதரவு அளித்ததை நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன். அப்படிப்பட்ட முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், கலெக்டர் பிரபுசங்கர், முறைகேடான உத்தரவை பிறப்பிக்க முடியுமா?அதுவும் மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான செயல்பாட்டில், கலெக்டருக்கு இப்படி ஒரு முக்கியமான கொள்கை முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் எங்கிருந்து வந்தது.

இதன் மூலம், மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புகள் என்று அனைத்தும் கேள்விக்குள்ளாகியுள்ளன. கலெக்டர் பிரபுசங்கர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • sankar - Nellai,இந்தியா

    சொம்பை எடுத்து உள்ள வைங்கப்பா

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்படி லஞ்சம் வாங்கினால் அம்பொன்னு பூடுவான்

  • sankar - Nellai,இந்தியா

    "மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பான செயல்பாட்டில், கலெக்டருக்கு முக்கியமான கொள்கை முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம்"- நிச்சயமாக உண்டு - இல்லையென்று சொல்ல நீ யாரு?

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    நாடகமன்றோ நடக்குது நாளும் வெளியிலே என்று பாடல் எனது யூடுபே லிங்கில் ஓடி கொண்டுள்ளது

  • jayvee - chennai,இந்தியா

    சுடுகாடு ஷங்கரும் இத்தடிதான் செய்தார்

Advertisement