dinamalar telegram
Advertisement

சர்ச்சை பெண் மத போதகர் மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்

Share
சென்னை:'வியாபாரிகள் மீது அவதுாறு பரப்பும் வகையில் பேசிய, பெண் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில்புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ தேவாலயத்தில், பாதிரியார் சாமுவேல் முன்னிலையில் நடந்த ஆராதனை கூட்டத்தில், மத போதகர் பியூலா செல்வராணி, வியாபாரிகளை ஆபாசமாக சித்தரித்து பேசியுள்ளார்.


குறிப்பாக நாடார் இன துவேஷத்தை முன்னிலைப்படுத்தியும், கலவரத்தை துாண்டும் விதமாகவும் அவர் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பியூலா செல்வராணியின் பேச்சு, அடித்தட்டு, உழைத்து முன்னேறும் வியாபாரிகளுக்கு எதிராகவும், ஜாதிய இனவெறியை துாண்டும் விதமாகவும் உள்ளது.




அவரது பேச்சுக்கு, பாதிரியார் சாமுவேல் வருத்தம் தெரிவிக்காதது மிகுந்த வேதனைக்குரியது. இச்சம்பவம், வேண்டுமென்றே விஷத்தை துாவும் விதமாகவும் உள்ளது.விசாரணை நடத்தி, விஷம பிரசாரம் பரவவிடாமல் தடுக்க வேண்டும். பியூலா செல்வராணி மற்றும் சாமுவேலை கைது செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (44)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    விக்கிரமராசாவேசிறிஸ்தவர்தானே

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இருக்கிறதே.

  • தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா

    மத போதகர் பியூலா செல்வராணி, வியாபாரிகளை ஆபாசமாக சித்தரித்து பேசியுள்ளார். அவர் கிறித்தவர் என்பதால்தான் ஆபாசமாக பேசினார் என்று சொல்ல முடியாது ஆபாசமாகப் பேசுபவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்

  • sridhar - Chennai,இந்தியா

    இனியாவது ஹிந்து நாடார்கள் விழித்து கொள்வார்களா . ஒருவர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் நாடார் என்று சொல்லிக்கொள்ள கூடாது.

  • Sutha - Chennai,இந்தியா

    அப்புறம் பிச்சை போடுவது யார்.

Advertisement